புதுடெல்லி: பிரிட்டிஷ் லான்செட் மருத்துவ ஆய்விதழில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும்வாராணசி ஆகிய 10 நகரங்களில்ஆண்டுதோறும் 33 ஆயிரம் பேர்காற்று மாசுபாடு காரணமாக மரணமடைகின்றனர். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலைவிட இந்த நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதன் விளைவுஇது. குறிப்பாக மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை ஆகிய மாநகரங்களில் அதீத காற்றுமாசு இல்லாதபோதும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் ஒவ்வொரு கியூபிக் மீட்டர் காற்றிலும் 15 மைக்ரோகிராம் வரை மட்டுமே நுண்ணிய துகள் தூசி இருத்தல் அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால், 2008-லிருந்து 2019 வரையிலான காலகட்டத்தில் மேற்கூறிய 10 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் குறுகிய கால 2.5 பிஎம் (நுண்ணிய துகள்கள்) காற்றில் கலந்திருப்பது பதிவாகி உள்ளது.
டெல்லியில் மட்டும் ஓராண்டில் 12 ஆயிரம் பேர் கரும்புகை, தூசிஉள்ளிட்ட காரணங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பரிதாபமாகஉயிரிழந்தனர். வாராணசியில் 8,300 பேர், மும்பையில் 5,100 பேர், கொல்கத்தாவில் 4,700 பேர், சென்னையில் 2,900 பேர், பெங்களூருவில் 2,100 பேர் எனஆண்டு தோறும் காற்று மாசுபாட்டினால் பலியாவது கடந்த பத்தாண்டுகளில் வழக்கமாகி உள்ளது.
இவ்வாறு அந்த ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது.