வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை நடத்தி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று தேடினார்கள். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை: சென்னையில் இன்று 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, மயிலப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை 1.55 மணிக்கு இ-மெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை நடத்தி வெடிகுண்டு ஏதும் இருக்கிறதா என்று தேடினார்கள். மேலும் மோப்பநாய் மூலமும் பள்ளி முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
ஆனால் இந்த சோதனையின் போது வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? இ-மெயில் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.