சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவை திமுக எம்.பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட வேண்டும் என்று புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை வைத்தனர்.
புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் கோரிக்கை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு அரங்கையும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோரும் பார்வையிட்டனர்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பதாவது:-
“இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம்நம் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் ஆகும்” .
புலம்பெயர்ந்து இந்தியா வந்த மக்கள் சில சவால்களை இன்னும் சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசிடம் குடியுரிமை வேண்டி போராடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன. இத்திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.