தமிழகத்தில் இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: தமிழகத்திற்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி , தமிழகத்தில் இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 40 கி.மீ. வேகத் தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அருணாச்சல பிரதேசம் , அசாம் , மேகாலயா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசம் , இமாச்சல பிரதேசம் , சிக்கிம் , பீகார் மாநிலங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.